சென்னை,

ள்ளிக்கல்வித்துறை செயலாளர் பொறுப்பில் இருந்து உதயச்சந்திரனை பணியிடமாற்றம் செய்ய, தமிழக அரசுக்கு  உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் பள்ளி பாடத்திட்டத்தை மாற்றியமைக்கும் குழுவில் உள்ள அதிகாரிகளை மாற்றக்கூடாது என்றும் ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

ஆட்சியாளர்களின் ஊழலுக்கு உதயச்சந்திரன் ஒத்துழைக்காத காரணத்தில்,  உதயசந்திரன் பொறுப்பேற்று சரியாக 5 மாதங்கள் மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில் அவரை அத்துறையிலிருந்து இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உதயசந்திரனை மாற்றக்கூடாது என பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில்,  பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பொறுப்பில் இருந்து உதயச்சந்திரனை பணியிட மாற்றம் செய்ய தமிழக அரசுக்கு  உயர்நீதிமன்றம் தடை விதித்தது உயர் நீதி மன்றம்.

மேலும், பாடத்திட்டம் மாற்றியமைக்கும் குழுவில் உள்ள அதிகாரிகளை நீக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் தமிழ்நாட்டு பள்ளிக் கல்வித்துறை செயலாளராக இந்த ஆண்டு மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார்.

தமிழ் இலக்கியத்தின் மீதும், பள்ளிக் கல்வி மீதும் ஆர்வம் கொண்ட உதயசந்திரன் பள்ளிக் கல்வித் துறையில் பொறுப்பேற்றிருப்பதைப் பலரும் வரவேற்றார்கள்.

அதைத்தொடர்ந்து பல்வேறு அதிரடியான,  ஆரோக்கியமான மாற்றங்களை கல்வித் துறையில் ஏற்படுத்தி வருகிறார்.

குறிப்பாக,   கவனிப்பாரற்று கிடந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு உயிர் கொடுத்தார். கிரேடு முறை அறிவிக்கப்பட்டது. மேலும், நீட் தேர்வுக்கு இணையான  பாடத்திட்டங்களை உருவாக்கு வதில் புதிய அணுகுமுறையைக் கையாண்டு வருகிறார்.

பள்ளிக்கல்வித் துறையில் அவர் எடுத்து வரும் புதிய நடவடிக்கைகளுக்கு கல்வியாளர்கள் மட்டுமல்லாது, எதிர்க்கட்சியினரின்  பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

இதன் காரணமாக  உதயசந்திரன் பள்ளிக் கல்வித் துறையிலிருந்து பணி மாற்றம் செய்யப்படலாம் என்று செய்திகள் உலா வந்தன.

தற்போது,  இதற்கு செக் வைத்துள்ள உயர்நீதி மன்றம்.