சென்னை,

ரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி குறித்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் அதிரடி கேள்விகளை எழுப்பி உள்ளார்.

அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க மறுப்பது ஏன் என்று சாட்டையை சுழற்றியுள்ளார் நீதிபதி.

தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூரில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க அரசிடம் அனுமதி கோரியிருந்தது பள்ளி நிர்வாகம். ஆனால், அரசு உத்தரவை  எதிர்த்து  பள்ளி நிர்வாகத்தின் சார்பில் உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் பள்ளிக் கல்வித்துறைக்கும், ஆசிரியர்களுக்கும்,  அரசுக்கும் பல கேள்விகளை கேட்டு சாட்டையை சுழற்றினார்.

அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது

அரசு ஊழியர்கள் ஏன் தங்கள் குழுந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர்?

பெற்றோர் தனியார் பள்ளிகளை நாட என்ன காரணம்?

அரசு பள்ளி ஆசிரியர் சங்கங்கள் தொடங்க ஏன் தடை விதிக்கக்கூடாது?

ஆங்கில வழிக்கல்வி எனில் தமிழில் பாடம் எடுப்பவர்கள் ஆங்கிலத்தில் எடுப்பார்களா?

உரிய நேரத்திற்கு வராத ஆசிரியர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது?

உரிய நேரத்திற்கு வராத ஆசிரியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது?

கிராம-மலைப்பகுதி ஆசிரியர்கள் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

ஆசிரியர்கள் கடைமைகளை செய்யாவிடில் மாணவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது.

ஆசிரியர்கள் வருகையை சிசிடிவி கேமரா கொண்டு கண்காணிக்காது ஏன்?

2012 முதல் எத்தனை மாணவர்கள் ஆங்கிலக் கல்வி கற்கின்றனர்?

2012 அரசாணைப்படி எத்தனை பள்ளிகளில் ஆங்கிலக் கல்வி தொடங்கப்பட்டுள்ளது?

என தமிழக அரசுக்கு 20 கேள்விகளை நீதிபதி கிருபாகரன் எழுப்பியுள்ளார்.

மேலும் இந்த வழக்கை அடுத்த மாதம் 14ம் தேதிக்கு ஒத்தி வைத்த அவர், 2 வாரத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.