சென்னை:  கள்ளக்காதலுனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி..

சென்னை,

டபழனி அருகே கள்ளக்காதல் காரணமாக கட்டிய புருஷனை காதலனுடன் சேர்த்து கொலை செய்தாள் மனைவி. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வடபழனி அருகே மனைவியின் கைகளை கட்டிபோட்டு கணவனை கொன்று  கொள்ளை சம்பவம்  போல் நடித்த மனைவியின் கள்ளக்காதலனையும் மனைவியையும்  போலீசார் கைது செய்தனர்.

வடபழனி பக்தவச்சலம் காலனி  2வது தெருவை  சேர்ந்தவர்  கோபாலகிருஷ்ணன். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் ஆட்டிட்டர்  அலுவலகத்தில் பணியாற்றி வந்தார்.  இவருடைய மனைவி பாரதி. இவர் வேறு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

பாரதி வேலை செய்யும் ஆபிசில் அவருடடன் கார்த்திக் ரவிந்திரன் லியோ என்பவரும் பணியாற்றி வந்தார். அவருக்கும் பாரதிக்கும் இடையே காதல் இருந்துள்ளது.

இதற்கிடையில்  கோபாலகிருஷ்ணனுக்கு  மதுப்பழக்கம் உண்டு. இதன் காரணமாக தம்பதிகளுக்குள் அடிக்கடி தகராறு வருவது உண்டு. அவர்களின்  இல்லற வாழ்க்கையும் சிறப்பாக இல்லை என்று கூறப்படுகிறது.

இதன்காரணமாக பாரதி தனது காதலனுடன் சுற்ற ஆரம்பித்துள்ளார். இருவருக்கும் இடையே உறவு பலப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் வெளியே சுற்றியவர்கள், நாளடைவில்  பாரதியின் வீட்டிலேயே சந்தித்து உல்லாசமாக இருக்க தொடங்கினர்.

கணவன் தண்ணி அடித்துவிட்டு மப்பில் இருக்கும்போது,  வீட்டில் இருக்கும் போதே, அவரை  ஹாலில் படுக்க வைத்துவிட்டு, கள்ளக்காதலனை அழைத்து வீட்டிலேயே பாரதி பல முறை உல்லாசமாக  இருந்துள்ளார்.

கொலையாளி லியோ - கொலையுண்ட கோபாலகிருஷ்ணன்
கொலையாளி கார்த்திக் ரவிந்திரன் லியோ – கொலையுண்ட கோபாலகிருஷ்ணன்

நாளடைவில் கோபாலகிருண்ணுக்கு இது தெரியவர கணவன் மனைவி இடையே மீண்டும் சண்டை மூண்டுள்ளது. இனி கள்ளக்காதலனை சந்திக்கவே கூடாது என கோபாலகிருஷ்ணன்  முட்டுக்கட்டை போட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பாரதி, இவர் இருந்தால் தனது  ஆசை நிறைவேறாது என நினைத்து கணவனை கொலை செய்ய  கள்ளக்காதலனுடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளார்.

கொள்ளை சம்பபவம் போலவும், மனைவியை கட்டி போட்டு தடுக்க வந்த கணவனை கொலை செய்தது போல இருக்க வேண்டும். அப்படியானால்தான் தாம் இருவரும் தப்பிக்க முடியும் என்று திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி சம்பவத்தன்று  இரவு கோபாலகிருஷ்ணன் தூங்கிய பின்னர், கள்ளக்காதலனை வீட்டுக்கு அழைத்துள்ளார் பாரதி.

காதலி வீட்டு தான்  வருவதை யாரும் பார்த்துவிட கூடாது என்றும்,  தன்னை அடையாளம் தெரிந்துகொள்ளக் கூடாது என்பதற்காகவும், விக் ஒன்றை வாங்கி  தலையில்  வைத்து கொண்டு பகதவச்சலம் காலனிக்கு வந்துள்ளார்.

இரவு இரண்டு மணிக்கு கோபாலகிருஷ்ணன் நல்ல போதையில் வீட்டு ஹாலில் தூங்கியபடி கிடக்க,  இருவரும் தனியறையில் உல்லாசமாக இருந்துள்ளனர்.

பின்னர்  அதிகாலை 4 மணி அளவில், தூக்கத்தில் இருந்த கணவன் கோபாலகிருஷ்ணனின் கழுத்தில், கத்தியை வைத்து அறுத்துள்ளார் கார்த்திக் .

பின்னர் ஏற்கனவே திட்டமிட்டபடி  கொள்ளை சம்பவம் நடந்தது போல காண்பிக்க , காதலி பாரதியை கை, கால்களை நாற்காலியுடன் சேர்த்து கட்டி முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்துள்ளார்.

பின்னர் ஒன்றும் தெரியாததுபோல, கொலைக்கு பயன்படுத்திய ரத்தம் தோய்ந்த கத்தியையும், ரத்தக்கறை படிந்த சட்டையையும் ஒரு பையில் போட்டு கொண்டு வெளியே வந்துள்ளார்.

அதே நேரத்தில் தற்செயலாக ரோந்து வந்த போலீசார், கார்த்திக்கின் நடவடிக்கையை பார்த்து சந்தேகமடைந்து அவரை அழைத்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் மேலும் சந்தேகம் அடைந்த போலீசார் அவனது வீட்டு முகவரியை கேட்டுள்ளனர்.

அதற்கு கார்த்திக் நானும் போலீஸ்தான், எனதுவீடு இங்கேதான் உள்ளது என்று கூறியுள்ளார்.

 

சந்தேகமடைந்த போலீசார் அவரது பையை சோதிக்க அதில்  ரத்தம் தோய்ந்த கத்தியும் ,ரத்தக்கறையுடன் உள்ள சட்டையும் இருந்துள்ளது.

இதுகுறித்து விசாரிக்கும்போதே, கார்த்திக் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடியுள்ளார். ஆனால், போலீசார் அவரை விடாமல்  துரத்தி மடக்கி பிடித்தனர்.

பின்னர் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்தபோது, செல்போனை கொள்ளையடிக்க கோபாலகிருஷ்ணன் எனபவர் வீட்டுக்கு சென்றபோது அவரை கொலை செய்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.

உடனடியாக கோபாலகிருஷ்ணன் வீட்டுக்கு சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பின்னர் மயக்கமாக இருந்த பாரதியை மீட்டு ராயபேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கார்திக் ரவிந்திரன் லியோ வை தீவிர விசாரணை நடத்தியபோது கள்ளக்காதலால் திட்டமிட்டு கொலை செய்ததை ஒத்துகொண்டுள்ளார்.

இதையடுத்து  போலீசார் கார்திக் ரவிந்திரன் லியோவை கைது செய்தனர். பாரதி சிகிச்சைக்கு பின்னர் கைது செய்யப்படுவார் என தெரிகிறது. கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனையே நாடகமாடி மனைவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.