சென்னை

ஐடி  மாணவி  ஃபாத்திமா தற்கொலை வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது.

கேரளாவைச் சேர்ந்த மாணவி ஃபாத்திமா லத்திஃப் சென்னை ஐஐடியில் படித்து வந்தார்.  சென்ற மாதம் 9 ஆம் தேதி அன்று அவர் கல்லூரி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கிடந்தார்.   மாணவி ஃபாத்திமா பெற்றோரைப் பிரிந்த ஏக்கத்தினால் மன அழுத்தம் அடைந்து தற்கொலை செய்துக் கொண்டதாக விடுதி காப்பாளர் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் கோட்டூர்புரம் காவல்துறையினர் பதிந்த வழக்கை சிபிசிஐடி  பிரிவினர் விசாரித்து வந்தனர்.  மாணவி ஃபாத்திமாவின் மரணத்துக்கு முன்று பேராசிரியர்கள் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது.   அதையொட்டி விசாரணைகள் நடந்தன.

மாணவியில் தந்தை லத்திஃப் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.  அவருடைய கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காததால் லத்திஃப் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோரிடம் இது குறித்து நேரில் சந்தித்து மனு அளித்தார்.

தற்போது இந்த வழக்கு சிபிசிஐடி காவல்துறையில் இருந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.