டிசம்பரில் சென்னை சர்வதேச திரைப்பட விழா! அரசு நிதி கிடைக்குமா?

சென்னை,

15வது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 14ல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு அரசு சார்பாக வழங்கப்படும் நிதி கடந்த ஆண்டு வழங்கப்படாத நிலையில், இந்த ஆண்டாவது கிடைக்குமா என கேள்வி எழுந்துள்ளது.

தமிழக அரசின் திரைப்படத்துறையும்,  இண்டோ சினி அப்ரிசேஷன் அமைப்பும்  இணைந்து நடத்தும் 15வது சென்னை சர்வதேச திரைப்பட விழா வருகிற டிம்பர் 14 முதல் 21ந் தேதி வரை 8 நாட்கள் நடைபெற உள்ளது.

இந்த விழாவின்போது உலக நாடுகளை சேர்ந்த பிரபலமான சுமார் 200 திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. இதைக்காண பல்வேறு நாடுகளை சேர்ந்த திரையுலக நட்சத்திர்ங்கள், மற்றும் பாலிவுட்,டோலிவுட், கோலிவுட் நட்சத்திரங்களும் பங்கேற்கிறார்கள்.

அதையொட்டி  12 சிறந்த தமிழ் படங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களின்  சிறந்த இயக்குனர், சிறந்த தயாரிப்பாளர்களுக்கு விருது வழங்கப்பட இருக்கிறது.

இந்த போட்டியில் கலந்து கொள்ள தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்க  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2016 அக்டோபர் 16ந் தேதியிலிருந்து 2017 அக்டோபர் 15ந் தேதிக்குள் தணிக்கை செய்யப்பட்ட படங்கள் இதில் கலந்து கொள்ளலாம். நவம்பர் 10ந் தேதிக்குள் படத்தை அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

ஜெயலலிதா இருக்கும்வரை இந்த திரைப்பட விழாவுக்கு அரசு நிதி வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் இந்த விழாவுக்கு நிதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில், இந்த ஆண்டாவது அரசு நிதி வழங்குமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Chennai International Film Festival in December! Will Government Give Funds?, டிசம்பரில் சென்னை சர்வதேச திரைப்பட விழா! அரசு நிதி கிடைக்குமா?
-=-