கெய்க்வாட் ஆட்டம் கொஞ்சம் ஓவர்தான் – 9 ஓவர்களுக்கு 53 ரன்கள் எடுத்த சென்னை!

மும்பை: பஞ்சாப் அணிக்கெதிரான தனது முதல் லீக் போட்டியில், 107 ரன்கள் என்ற மிகக்குறைந்த இலக்கை விரட்டிவரும் சென்னை அணி, 9 ஓவர்களில், 1 விக்கெட் இழந்து 53 ரன்கள் அடித்துள்ளது.

துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட், 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால், அதற்காக அவர் எதிர்கொண்ட பந்துகள் 16 என்பது குறிப்பிடத்தக்கது. என்னதான் குறைந்த இலக்கு என்றாலும், இத்தகையதொரு ஐபிஎல் பேட்டிங், கொஞ்சம் ஓவர்தான் என்கின்றனர் ரசிகர்கள்.

பாப் டூ பிளசிஸ் நிதானமாக ஆடிவருகிறார். மொயின் அலி சற்று அதிரடியாக ஆடிவருகிறார். 17 பந்துகளில் 24 ரன்களை அடித்துள்ளார். டூ பிளசிஸ் 1 சிக்ஸர் அடித்துள்ளார்.

சென்னை அணிக்கு, தற்போதைய நிலை வரை, அதிக பந்துகளில், குறைந்த ரன்களே எடுக்க வ‍ேண்டிய நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம், தேவையின்றி விக்கெட்டுகளை இழக்காமல், சென்னை அணி அதிக விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.