ஒப்பந்ததாரர் செய்யாதுரை மற்றும் 15 பேருக்கு வருமான வரித்துறை சம்மன்

சென்னை:

ரசு ஒப்பந்ததாரர் செய்யாதுரையின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடைபெற்ற 5 நாட்கள் சோதனையை தொடர்ந்து, செய்யாதுரை உள்பட 15 பேருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

வருமானவரி சோதனையை தொடர்ந்து எஸ்பிகே நிறுவன உரிமையாளர் செய்யாதுரை உள்ளிட்ட 15 பேருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது.  அதில், செய்யாதுரை மற்றும் பிஎஸ்கே குழும நிர்வாகிகள் உள்பட   15 பேர்  சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று மாலை  விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு ஒப்பந்ததாரரான நாகராஜன் செய்யாத்துரையின் வீடு மற்றும் அலுவலகங்களில் 5 நாட்கள் நடைபெற்ற  வருமான வரித்துறையினரின் சோதனையின்போது,  ரூ.180 கோடி பணம், 105 கிலோ தங்கம், ரூ. 10 கோடி மதிப்பிலான வைரம் மற்றும் கோடிக்கணக்கான மதிப்புள்ள  நில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த ரெய்டு மற்றும் அதில் கைப்பற்றப்பட்டுள்ள ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்த, செய்யாதுரை உள்பட 15 பேரை இன்று மாலை வருன வரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.