சென்னை ஐ.டி. பெண் ஊழியர் தற்கொலை: மன அழுத்தம் காரணமா?
சென்னை:
ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பெண் ஊழியர் 9-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அவரது தற்கொலைக்கு காரணம் மனஅழுத்தமா அல்லது காதல் விவகாரமா என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
சென்னை, துரைப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருபவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பிரியங்கா (வயது 24). நேற்று மாலை பணி முடிந்து அனைவரும் வீட்டுக்கு செல்லும் வேளையில், பிரியங்கா தான் வேலை செய்து வந்த நிறுவனத் தின் 9 வது மாடிக்கு சென்று, அங்கிருந்கு குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இது சக ஊழியர்களிடையே பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து, உடனடியாக துரைப்பாக்கம் காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பிரியங்காவின் உடலைக் கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரியங்காவின் தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். அவருடன் பணிபுரிபவர்கள் மற்றும், அவர் தங்கியிருந்த விடுதிக்கும் சென்று விசாரணை சென்ற போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிரியங்காவின் மரணத்துக்கு காரணம் வேலைபளுவால் ஏற்பட்ட மன உளைச்சலாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஒர்க் பிரஷர் எனப்படும் மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அல்லது காதல் விவகாரமா? என்பது குறித்தும் பல கோணங் களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
பிரியங்கா தற்கொலை செய்த சம்பவம் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் மற்ற ஊழியர்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து பிரியங்காவின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் சென்னை வந்துள்ளனர்.