மிரட்டும் கோயம்பேடு கொரோனா: சென்னை, காஞ்சிபுரம், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களும் பாதிப்பு… விவரம்

சென்னை:

மிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தீவிரமாகி வருகிறது. இன்று பல்வேறு மாவட்டங்களில் மேலும் பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தை கொரோனா ஹாட்ஸ்பாட்டாக திகழ்ந்துள்ள நிலையில், அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள், வணிகர்கள்  மூலமாக சென்னை மற்றும் அண்டை மாவட்டங் களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கோயம்பேட்டில் இருந்து சொந்த ஊருக்கு சென்றவர்களை கண்டறிந்து அவர்களுக்கு கொரோனா சோதனை செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.  கோயம்பேடு மார்க்கெட்டில் ஏற்பட்ட தொற்று காரணமாக, மற்ற மாவட்டங்களிலும், நோய் பரவல் அதிகரித்து வருகிறது.

சென்னை மாநகரம்

கோயம்பேடு காய்கறி சந்தை பகுதியில் மேலும் 21 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சென்னையின் முக்கிய காய்கறி சந்தையாக திகழும் கோயம்பேடு பகுதியில் கொரோனா பரவலால் நேற்று வரை 149 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்,  இன்று 170 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை காவலர் குடியிருப்புகளுக்கு கோயம்பேட்டில் இருந்து தினமும் காய்கறி வாங்கி வந்த புதுப்பேட்டையை சேர்ந்த தலைமைக் காவலருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அவரது குடும்பத்தினர், மற்றும் அவர்கள்  வசிக்கும் காவலர் குடியிருப்பில் உள்ளோருக்கு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அசோக் நகர் 11ஆவது தெருவில் கோயம்பேடு சென்று வந்த வியாபாரி ஒருவர் மூலம் 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால் அந்த தெரு முழுவதும் அடைப்பு மூலம் தடை செய்யப்பட்டுள்ளது

காஞ்சிபுரம் மாவட்டம்:

கோயம்பேடு சந்தை வாயிலாக காஞ்சிபுரத்தில் ஏற்கெனவே 7 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் இன்று மேலும் 29 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் காஞ்சிபுரத்தில் கோயம்பேடு மார்க்கெட் மூலமாக மட்டும் 36 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும்,  400 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அரியலூர் மாவட்டம்

கோயம்பேடு சந்தைக்கு சென்று காய்கறி வாங்கியவர் மூலமாக அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவி உள்ளது. இங்கு இன்று மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுஉளளது.

புதுக்கோட்டை மாவட்டம்

கோயம்பேட்டில் இருந்து புதுக்கோட்டை வந்த 60 வயது ஆண் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதிக் கப்பட்டார். அதேபோல சென்னையிலிருந்து புதுக்கோட்டைக்கு துக்க காரியத்துக்கு வந்த நபர்களும் தனிமைப்படுத்தப்பட்டுப் பரிசோதிக்கப்பட்டனர்.

இவர்களில் சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், கோயம்பேட்டிலிருந்து வந்த 60 வயது ஆணுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை அருகே உள்ள மிரட்டுநிலை கிராமத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞருக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவருக்கு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 3 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் ஆயுதப்படை பயிற்சி மையத்தில் 6 பெண் பயிற்சி காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை அடுத்து 6 பயிற்சி காவலர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.