சென்னை கவின் கலைக்கல்லூரி மாணவர் தற்கொலை! பரபரப்பு

சென்னை,
சென்னை எழும்பூரில் உள்ள கவின் கலை கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்ததையடுத்து, சக மாணவர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக பரபரப்பு நிலவி வருகிறது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டம் அடுக்கும்பாறை என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் சென்னையில் இயங்கி வரும் அரசு கவின் கலைக் கல்லூரியில் செராமிக்  துறையில் இறுதியாண்டு படித்து வந்தார். இவருக்கு கல்லூரியில் துறைத்தலைவர் மூலம் மிகுந்த நெருக்கடிகள் தரப்பட்டதாக சக மாணவர்கள் கூறப்படுகிறது.

இந்நிலையில் சொந்த ஊருக்கு சென்ற பிரகாஷ் நேற்று இரவு பிரகாஷ் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அந்த கடிதத்தில் தனது தற்கொலைக்கு துறைத்தலைவர் மட்டுமே காரணம் என குறிப்பிட்டிருந்தார்.

இதைதையடுத்து சக மாணவர்கள் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கல்லூரி முதல்வர் மீதும் சம்பந்த பட்ட துறைத்தலைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அக்கல்லூரி மாணவர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.