சென்னை

நீதிமன்றங்கள் செயல்படாததால் இளம் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய 72 வழக்கறிஞர்களுக்கு சட்ட சங்கம் தலா ரூ.2000 நிதி உதவி அளித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் நாடெங்கும் ஊரடங்கு அமலில் உள்ளது.

ஆயினும் கொரோனா பாதிப்பு குறையாததால் இருமுறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு தற்போது மே 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் மார்ச் 25 ஆம் தேதிக்கு முன்பு இருந்தே நீதிமன்றங்கள் செயல்படவில்லை.

நீதிமன்றங்கள் செயல்படாததால் இளம் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய வழக்கறிஞர்கள் மிகவும் துயரப்பட்டு வந்தனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைந்துள்ள சட்ட சங்கம் (லா அசோசியேஷன்) இளம் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய 72 வழக்கறிஞர்களுக்கு தலா ரூ.2000 நிதி உதவி அளித்துள்ளது.

இந்த ரூ.1.44 லட்ச நிதி உதவி சக வழக்கறிஞர்களிடம் இருந்து பெற்ற நன்கொடையில் இருந்து அளிக்கபட்டுள்ள்து.

நன்கொடை வழங்கிய வழக்கறிஞர்களுக்கு லா அசோசியேஷன் நன்றி தெரிவித்துள்ளது.