பருவமழை குறைவு : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ?

சென்னை

ருவமழை குறைவால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என கூறப்படுகிறது.

தமிழக தலைநகரான சென்னையில் வடகிழக்கு பருவமழை மூலமே பெரும்பாலான நீர் கிடைக்கும்.   இந்த ஆண்டு சராசரி அளவுக்கு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.   ஆனால் இதுவரை எதிர்ப்பார்த்த அளவுக்கு பருவமழை பெய்யாமல் உள்ளது.

அதாவது சராசரியாக சென்னையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் 39 செமீ மழை பெய்யும்.   ஆனால் இந்த ஆண்டு இதுவரை 33 செமீ வரை மட்டுமே மழை பெய்துள்ளது.    சரியாக சொல்லப்போனால் 16% மழை குறைந்துள்ளது.   இது சதவிகித அளவில் கம்மியாக தோன்றினாலும் அந்த மழை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மாநகர் தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.   இந்த சென்னை மாநகரின் குடிநீர் தேவை புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் மற்றும் பூண்டி ஏரிகள் நீர் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.   ஆனால் இந்த ஏரிகளில் தற்போது மிகவும் குறைவான அளவே நீர் உள்ளது.   சென்னை மாநக்ருக்கு தற்போது ஒரு மாத குடிநீர் தேவை 83 கோடி லிட்டர் ஆகும்.

சென்னைக்கு குடிநீர் அளித்து வரும் ஏரிகளில் மொத்தம் 1.7 டி எம் சி நீர் மட்டுமே உள்ளது.    இந்த நீரின் மூலம் ஜனவரி மாதம் வரை மட்டுமே மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யமுடியும் என்னும் நிலை உள்ளது.    இந்த மாதம் நல்ல மழை பெய்து போதிய நீர் கிடைக்காவிடில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You may have missed