சென்னை : கொரோனா மருந்து சோதனையில் உயிரிழந்த மருந்து நிறுவன ஊழியர்

சென்னை

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் சோதனையில் ஈடுபட்ட ஒரு மருந்து நிறுவன ஊழியர் மரணம் அடைந்து அந்த நிறுவன அதிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

                                                               சிவநேசன்

சுஜாதா பயோடெக் என்னும் நிறுவனம் டாக்டர் ராஜ்குமார் என்பவரால் உருவக்கபட்டது.  இந்த நிறுவனம் நிவாரண் 90 இருமல் மருந்து, வெல்வெட் ஷாம்பு மற்றும் மெமரி பிளஸ் மாத்திரைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது.  இந்நிறுவனத்தின் மேலாளரான 47 வயதான டாக்டர் சிவநேசன் என்பவர் இங்கு 27 வருடங்களாகப் பணி புரிந்து வருகின்றனர்.  இவர்கள் இருவரும் இணைந்து மேலே குறிப்பிட்ட மருந்துகளைக் கண்டு பிடித்துள்ளனர்.

                      ராஜ்குமார்

அவ்வகையில் ராஜ்குமார் மற்றும் சிவநேசன் ஆகிய இருவரும் இணைந்து கொரோனாவை குணப்படுத்த மருந்து கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டனர்.  இந்த நோயைக் குணப்படுத்த இரத்த செல்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என்னும் முடிவுக்கு இருவ்ரும் வந்துள்ளனர்.  இதையொட்டி ராஜ்குமாரின் ஜி என் செட்டி இல்லத்தில் உள்ள பரிசோதனை சாலையில்  சோடியும் நைட்ரேட் மாத்திரைகளை உட்கொண்டுள்ளனர்.

இருவரும் உடனடியாக சோதனைச் சாலையில் மயங்கி விழுந்துள்ளனர்.  இதைக் கண்டு பதறிப் போன ராஜ்குமார் குடும்பத்தினர் இருவரையும் தி நகரில் உள்ள தனியர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.   நேற்று சிவநேசன் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளார்.    ராஜ்குமார் அபாய நிலையைத் தாண்டி அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  சிவநேசன் உடல் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.,

இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர், “குற்றவியல் சட்டம் 174 இன் கீழ் நாங்கள் வழக்கு பதிந்துள்ளோம்.  சிவநேசனின் பிரேதப் பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு மேற்கொண்டு நடவடிககைகள் எடுக்க உள்ளோம்.  இது வரை யாரும் கைது செய்யப்படவில்லை.  ராஜ்குமாரின் பரிசோதனை சாலையைச் சோதனை செய்த காவல்துறையினர் ஒரு சில மருந்துகள் மற்றும் ரசாயனம் ஆகியவற்றைக் கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.” என தெரிவித்துள்ளார்.