பொதுமக்களே உஷார்: இன்று கனமழை பெய்யுமாம்….!

சென்னை:

ங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகி இருப்பதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.

வடமேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளத. இது மேலும் வலுப்பெறும் என்பதால் தமிழகம், புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதி காரி கூறியதாவது,

‘‘வடமேற்கு வங்கக் கடலில் ஒடிசா கடற் கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிக்கிறது. அது வலு வடைய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் ஆங்காங்கே ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும்.

ஒருசில இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட் டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழையோ அல்லது இடியுடன் மழையோ பெய்யக்கூடும்’’ என்று கூறினார்.

மேலும்,  கடந்த 24 மணி நேரத்தில்  விருதுநகர் மாவட்டத்தில் அதிகபட்சமா 70 மிமீ மழை பதிவாகி இருப்பதாகவும், சென்னை அருகே  செங்கல்பட்டு, விளாத்திகுளம், தாமரைப்பாக்கம் போன்ற இடங்களில்  40 மிமீ, விரிஞ்சிபுரம், காஞ்சிபுரம், மாமல்லபுரத்தில் 30 மிமீ, திருக்கோவிலூர், நாமக்கல், கமுதி, வேலூர், மேலூர், விழுப்புரம், திருச்சுழி, உத்திர மேரூர், திண்டிவனம், வந்தவாசி யில் 20 மிமீ மழை பதிவாகி உள்ளது என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் 10 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மென் பிரதீப் ஜானும் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருப்பது  குறிப்பிடத்தக்கது.