பள்ளி நிலத்தை கையகப்படுத்த சென்னை மெட்ரோ நோட்டிஸ்
சென்னை
சென்னை நுங்கம்பாக்கதில் உள்ள ஒரு பள்ளியின் மைதானத்தை மெட்ரோ ரெயில் நிர்வாகம் நிலையம் அமைக்க கையகப்படுத்த உள்ளது
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள புகழ்பெற்ற பள்ளிகளில் குட் ஷெப்பர்ட் பள்ளியும் ஒன்றாகும். இங்கு ஆயிரக்கணக்கானோர் கல்வி பயின்று வருகின்றனர். சென்னையில் மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருவது தெரிந்ததே.
இந்த இரண்டாம் கட்டப்பணியில் நுங்கம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையம் குட் ஷெப்பர்ட் பள்ளியின் மைதானத்தில் அமைக்கப்பட உள்ளது. அதனால் அந்த மைதானம் உட்பட சுமார் இரண்டரை ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த பள்ளிக்கு மெட்ரொ நிர்வாகம் நோட்டிஸ் அனுப்பியது.
இந்த நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை ரத்து செய்யக்கொரி பள்ளி நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரந்துள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு முடியும் வரை தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் வழக்கை அடுத்த மாதத்துக்கு ஒத்தி வைத்துள்ளது.