சென்னை மெட்ரோ ரயில் 2வது கட்டப்பணி: மத்தியஅரசு உதவ மறுப்பு

சென்னை:

சென்னையில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள  மெட்ரோ ரயில் 2வது கட்டப்பணிக்கு  மத்திய அரசு நிதி உதவி அளிக்க மறுத்துவிட்ட நிலையில், தமிழக அரசு ஜப்பான் அரசுடன் நேரடியாக ஒப்பந்தம் போட்டுள்ளது.

இதன்காரணமாக  2-ம் கட்ட மெட்ரோ ரயில் விரிவாக்கத்  திட்டம் மாநில அரசு திட்டமாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

தமிழக தலைநகர் சென்னையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரயில் பணிகள் ஏறக்குறைய முடிவடையும் தருவாயில் உள்ளது.  வரும் 2020ம் ஆண்டுக்கள் முதல்கட்ட பணிகள் முடிவடைந்த விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக மெட்ரோ ரயில் விரிவாக்க பணிகள் குறித்து அறிவிக்கப்பட்டது. அதன்படி மெட்ரோ ரயில் 2வது கட்டப்பணி விரைவில் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.  மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடைப்பெறும் வகையில், அதற்கான ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது இறுதியை நிலையை எட்டியுள்ள மெட்ரோ ரயில் திட்டப்பணிகளை மத்திய மாநில அரசுகள் நிதி உதவியுடன் இணைந்து நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த திட்டத்திற்கு போதிய அளவு வரவேற்பு கிடைக்காத தால், தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது.

எதிர்பார்த்த அளவுக்கு பயணிகள் மெட்ரோ ரயிலை உபயோகிக்காத நிலையில்,  2-ம் கட்ட திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக மெட்ரோ 2வது கட்ட விரிவாக்கத்துக்கு தமிழக அரசு ஜப்பான் நிறுவனத்துடன் நேரடியாக ஒப்பந்தம் போட்டுள்ளது.

மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டப் பணிகளுக்காக ரூ.20,196 கோடி கடன் பெறுவதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது. அதன்படி,  2028ம் ஆண்டு‘ ரயில் சேவை தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் சேவை சுமார் 176.70 கிலோ மீட்டர் தூரம் வரை விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

2ம் கட்ட மெட்ரோ ரயில் சேவையில் 3 இடங்களில் சுரங்கப்பாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன. இந்த சுரங்கப்பாதைகள் மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும், களங்கரை விளக்கம் முதல் சிஎம்பிடி வரியிலும் அமைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.