நாட்டிலேயே முதல்முறையாக மெட்ரோ ரயிலில் சைக்கிள்: அனுமதி தந்த சென்னை மெட்ரோ நிறுவனம்

சென்னை: நாட்டிலேயே முதல்முறையாக மெட்ரோ ரயிலில் சைக்கிள் கொண்டு செல்லலாம் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பயணிகள் மற்றும் பொது மக்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து வருகிறது.  சில பொருட்களை ரயிலில் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது.

அதன்படி, மெட்ரோ ரயிலில் பயணிகள் மாமிசம், உணவு பொருட்கள் மற்றும் சைக்கிள் உள்ளிட்ட பல பொருட்களை கொண்டு செல்ல கூடாது என்று அறிவித்திருந்தது.

இந் நிலையில் சில கட்டுப்பாடுகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் தளர்த்தி இருக்கிறது. அதில் குறிப்பாக, மின்சார ரெயில்களில் கொண்டு செல்வது போல, மெட்ரோ ரயிலிலும் பயணிகள் தங்களது சைக்கிளை மட்டும் இனி எடுத்து செல்லலாம் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

பொது மக்கள் மற்றும் மெட்ரோ ரெயில் பயணிகளின் வசதிக்காக இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் இந்த வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: bicycle, Chennai metro, Chennai metro rail corporation, metro rail:, சென்னை மெட்ரோ, சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன், சைக்கிள், மெட்ரோ ரயில்
-=-