சென்னையில் ஏப்ரல் 14ந்தேதி வரை மெட்ரோ ரயில் சேவை கிடையாது, அதுவரை மூடுதல் தொடரும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ரயில்சேவை உள்பட வாகனப் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டுஉள்ளது. இதைத்தொடர்ந்து, சென்னையில் இயக்கப்பட்ட வந்த மெட்ரோ ரயில் உள்பட புறநகர் மற்றும் அனைத்து வகையான ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன.

மெட்ரோ ரயில் சேவை கடந்த 23-ம் தேதி முதல் 31ந்தேதி வரை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், நாடு முழுவதும் முழு ஊரடங்கு ஏப்ரல் 14ந்தேதி வரை தொடரும் என்று பிரதமர் மோடி அறிவிருந்தார். அதைத் தொடர்ந்து மெட்ரோ ரயில் சேவையும் வரும் 14ந்தேதி வரை தொடங்காது என்றும், மெட்ரோ ரயில்கள் இயக்கப்படாது என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.