சென்னை:

யணிகளின் வேண்டுகோளை ஏற்று சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் 45 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரயில் இயக்க திட்டமிடப்பட்டு அதில் 35 கி.மீ. தூர பணிகள் முடிந்து ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ரயில் கட்டணம் குறைந்த பட்சம் ரூ.10 முதல் அதிகபட்சம் ரூ. 70 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

மெட்ரோ ரயில் கட்டணம் சாதாரண ரயில் கட்டணத்தை விட பல மடங்கு அதிகமாக உள்ளது. இதன் காரணமாக நடுத்தர வர்க்கத்தினர், மெட்ரோ ரயில் சேவையை உபயோகப்படுத்தவதை தவிர்த்து வந்தனர்.

மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும் பயணிகள் மெட்ரோ நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், ஏற்கனவே இருந்த கட்டணத்தில்  இருந்து அதிகமாக பட்சமாகரூ.10 வரை குறைத்து  மெட்ரோ நிர்வாகம் அறிவித்து உள்ளது. அதன் விவரம்

விமான நிலையத்திலிருந்து…

மீனம்பாக்கம் – ரூ. 10

நங்கநல்லூர் – ரூ. 20

ஆலந்தூர், கிண்டி, சின்னமலை, சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை – ரூ. 40

டிஎம்எஸ், ஆயிரம் விளக்கு, எல்ஐசி, அரசினர் தோட்டம், சென்ட்ரல்  – ரூ. 50

உயர் நீதிமன்றம், மண்ணடி, வண்ணாரப்பேட்டை – ரூ. 60

ஈக்காட்டுத் தாங்கல், அசோக்நகர், வடபழனி, அரும்பாக்கம் – ரூ. 40

கோயம்பேடு பேருந்து நிலையம், கோயம்பேடு, திருமங்கலம், அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு – ரூ. 50

ஷெனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா, எழும்பூர் – ரூ. 60

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து….

விமான நிலையம் – ரூ. 50

மீனம்பாக்கம், நங்கநல்லூர் ரோடு, ஆலந்தூர், கிண்டி, சின்னமலை, சைதாப்பேட்டை – ரூ. 40

நந்தனம், தேனாம்பேட்டை, டிஎம்எஸ், ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி., அரசினர் தோட்டம், சென்ட்ரல் – ரூ. 40

உயர் நீதிமன்றம், மண்ணடி, வண்ணாரப்பேட்டை – ரூ. 50

ஈக்காட்டுத்தாங்கல் – ரூ. 40

அசோக் நகர் ரூ. 30

வட பழனி – ரூ. 20

அரும்பாக்கம் – ரூ.10

கோயம்பேடு – ரூ. 10

திருமங்கலம், அண்ணா நகர் டவர் -ரூ. 20

அண்ணாநகர் கிழக்கு – ரூ.30

ஷெனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா, எழும்பூர், பரங்கிமலை – ரூ.40

எழும்பூரில் இருந்து…

விமானநிலையம் – ரூ.50

மீனம்பாக்கம் – ரூ.60

நங்கநல்லூர் ரோடு – ரூ.50

ஆலந்தூர், கிண்டி – ரூ.50

சின்னமலை, சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை, டி.எம்.எஸ். – ரூ.40

ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி. – ரூ.30

அரசினர் தோட்டம் – ரூ.20

சென்ட்ரல் – ரூ.10

உயர் நீதிமன்றம், மண்ணடி – ரூ.20

வண்ணாரப்பேட்டை – ரூ.30

ஈக்காட்டுதாங்கல், அசோக்நகர் – ரூ.50

வடபழனி – ரூ.40

அரும்பாக்கம் – ரூ.40

கோயம்பேடு, திருமங்கலம் – ரூ.40

அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு – ரூ.30

ஷெனாய் நகர் – ரூ.20

பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம் – ரூ.10

பரங்கிமலை – ரூ.50

சென்ட்ரலில் இருந்து…

விமானநிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர் ரோடு, ஆலந்தூர் – ரூ.50

கிண்டி, சின்னமலை, சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை – ரூ.40

டி.எம்.எஸ். – ரூ.30

ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி. – ரூ.20

அரசினர் தோட்டம் – ரூ.10

உயர் நீதிமன்றம் – ரூ.10

மண்ணடி, வண்ணாரப்பேட்டை – ரூ.20

ஈக்காட்டுதாங்கல், அசோக்நகர், வடபழனி, அரும்பாக்கம் – ரூ.50

கோயம்பேடு பஸ் நிலையம் – ரூ.40

திருமங்கலம், அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு – ரூ.40

ஷெனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி – ரூ.30

கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா – ரூ.20

எழும்பூர் – ரூ. 10

பரங்கிமலை – ரூ.40

இவ்வாறு புதிய கட்டணம் அறிவிக்கப்பட்டு உள்ளது.