சென்னை மெட்ரோ ரயில்: 2ம் கட்ட திட்டப்பணிக்கு ரூ.20,196 கோடி கடன் ஒப்பந்தம்

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டப்பணிக்கு ரூ.20,196 கோடி கடன் பெறுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடைப்பெற உள்ளன.

metro

சென்னை மெட்ரொ ரயிலின் முதல் கட்ட திட்டப்பணிகள் 2020ம் ஆண்டிற்குள் நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து 2ம் கட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளன. அதற்கான முன்வரைவு தகவலில் 107.55 கிலோ மீட்டர் தூரம் வரையில் ரயில் சேவையை தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேலைகள் தொடங்கப்பட்டு முடிவடைந்த நிலையில் 2028ம் ஆண்டு 2ம் கட்ட ரயில் சேவை தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் சேவை சுமார் 176.70 கிலோ மீட்டர் தூரம் வரை விரிவுப்படுத்த திடமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2ம் கட்ட திட்டப்பணிகளுக்காக ரூ.20,196 கோடி கடன் பெற சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒப்பந்தம் போட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 2வது கட்டப் பணிகளுக்கான நுண்ணிய வடிவமைப்பு மற்றும் மண் பரிசோதனை ஆகியவற்றிற்காக 9 நிறுவனங்களுடன் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒப்பந்தம் போட்டது.

அதில் ஒரு ஒப்பந்ததாரர் 107 கி.மீ பயண தூரத்தில் 104 ரயில் நிலையங்களுடன் கூடிய வரைபடம் ஒன்றை வெளியிட்டார். இதன் மதிப்பு ரூ.85,047 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வரைபடத்தை ஆய்வு செய்த சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், 107.55 கிமீ பயண தூர பயணத்தில் ரயில் நிலையங்களின் எண்ணிக்கையை 116ஆக அதிகரித்துள்ளது.

2ம் கட்ட மெட்ரோ ரயில் சேவையில் 3 இடங்களில் சுரங்கப்பாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன. இந்த சுரங்கப்பாதைகள் மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும், களங்கரை விளக்கம் முதல் சிஎம்பிடி வரியிலும் அமைக்கப்பட உள்ளன.