சென்னை மெட்ரோ ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
சென்னை
மெட்ரோ ரெயில் ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை மெட்ரோ ரெயில் ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகள் எழுப்பி போரடி வருகின்றனர். டில்லி மெட்ரோ ரெயில் ஊழியர்களுக்கு 15% ஊதிய உயர்வு வழங்கி உள்ளனர். ஆனால் சென்னை மெட்ரோ ஊழியர்களுக்கு 10% மட்டுமே ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ஊழியர்களுக்கு இதர படிகளாக 35% ஊதியம் வழங்கப்பட்டு வந்துள்ளது. தற்போது இது முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த இதரப் படிகளை மீண்டும் வழங்க மெட்ரோ ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அதற்கு செவி சாய்க்கவில்லை.
இதனால் நேற்று கட்டுப்பாட்டு அறை, ரெயில் தட பராமரிப்புத் துறை ஆகிய பிரிவுகளில் பணி புரியும் தொழிலாளர்கள் கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினர். இன்று ஊழியர்களுடம் நிர்வாகம் பேச்சு வார்த்தை நடத்தியது. ஆனால் அந்த பேச்சு வார்த்தை தோல்வி அடைந்துள்ளது. அதை ஒட்டி இன்று மெட்ரோ ரெயில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.