சென்னையில் மெட்ரோ ரயில் சேவை 3 மணி நேரம் பாதிப்பு: பயணிகள் அவதி

சென்னை:

மின்சாரம் தொடர்பான பிரச்சினை காரணமாக சென்னையில் மெட்ரோ ரயில் சேவை சுமார் 3 மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக பயணிகள் அவதியடைந்தனர். தற்போது  ரயில் சேவை தொடர்ந்து வருகிறது.

சென்னையில் சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை மின்சாரம் தொடர்பான  தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென பாதிக்கப்பட்டது. காலை 6 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது  பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கோளாறு சரி செய்யப்பட்டது. சுமார் 3 மணி நேரம் நீடித்த இந்த பரபரப்பு காரணமாக பயணிகள் கடும் அவஸ்தைக்கு உள்ளானார்கள்.

இதுகுறித்து தெரிவித்துள்ள மெட்ரோ ரயில் அதிகாரிகள், ஒருவழிப்பாதை மின் தடத்தில் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, மின்கோளாறால் 2 பாதையிலும் சேவை நிறுத்தப்பட்டதாகவும்,  3 மணி நேர பாதிப்பிற்கு பிறகு சென்னை மெட்ரோ ரயில் போக்குவரத்து சீரானது. எ

கோளாறை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வந்தபோது, குறைந்த வேகத்துடன் ஒரு பாதை யில் மட்டும் ரயில்கள் இயக்கப்பட்டு வந்ததாகவும் தெரிவித்து உள்ளனர்.