அக்டோபர் 27ம் தேதி சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படும் நேரம் நீட்டிப்பு…!

சென்னை: அக்டோபர் 27ம் தேதி மட்டும் சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், விடுமுறை முடிந்து சென்னை வரும் பயணிகள் வசதிக்காக வரும் 27ம் தேதி மட்டும் மெட்ரோ ரயில் சேவைகள் நீட்டிக்கப்படுகிறது.

அதாவது காலை 7 மணிக்கு பதிலாக காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகைகளை முன்னிட்டு விடுமுறையில் சொந்த ஊர் செல்லும் பொது மக்கள், செவ்வாயன்று பணிக்கு திரும்ப வசதியாக, சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.