சென்னை,

சென்னை அண்ணாசாலை ஜெமினி மேம்பாலம் அருகே  மீண்டும் திடீர் விரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் வாகனங்க்ளில் வந்தவர்கள் பீதி அடைந்தனர்.

சென்னை முழுவதும்  மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்று வருவதால் ஆங்காங்கே திடீர் பள்ளங்கள் ஏற்பட்டு வருகிறது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் திடீர் பள்ளம் ஏற்பட்டு, மாநகர பஸ் மற்றும் கார் சிக்கியது. அந்த பள்ளம் சரி செய்யப்பட்டு நேற்று மாலை முதல் போக்குவரத்து தொடங்கியது.

இந்நிலையில் தற்போது மீண்டும் அண்ணாசாலையில்  விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

விரிசல் ஏற்பட்ட பகுதியில் மாநகர காவல்துறையினர், மெட்ரோ சுரங்கப்பாதை ஊழியர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

பொதுமக்கள் யாரும் விரிசல் ஏற்பட்ட பகுதியில் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போது சாலையை செப்பனிடும் பணி நடைபெற்ற வருகிறது. இந்த பணியில் 50க்கும் மேற்பட்ட மெட்ரோ தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.