மாயமான மாணவியின் எலும்புக்கூடு வழக்கில் திடீர் திருப்பம்: கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த 5 பேர் கைது

திருவள்ளூர்:

மாயமான 10வகுப்பு மாணவியின் எலும்புக்கூடு சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக 5 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளவர். அவர்கள் மாணவியை கூட்டாக வன்புணர்வு செய்து கொலை செய்து  புதைத்திருந்தது தெரிய வந்துள்ளது.

சமீபத்தில், (பிப்ரவரி 10, 2019) திருவள்ளுரில் எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில்,  அது திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பள்ளி மாணவியின்  எலும்புக்கூடு என தெரிய வந்தது.

இந்த மாணவி கடந்த கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர்  7ந்தேதி பள்ளிக் சென்றவர் திரும்பாத நிலையில் அதுகுறித்து புகார் பதியப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த கொத்த வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகள் சரிதா. அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த  அவரது பெற்றோர்  பொதட்டூர்பேட்டை காவல் நிலையில் புகார் கொடுத்தனர்.

புகாரின் பேரில் விசாரணை நடத்தி வந்த காவல்துறையினருக்கு சமீபத்தில்,  கீச்சலம் கிராமம் அருகே சரிதாவின் உடலை போலீசார் கண்டு பிடித்துள்ளனர். அதைத்தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் நடத்திய சோதனை மற்றும், அருகே காணப்பட்ட துணியின் பாகங்களை வைத்து, அது மாயமான மாணவி சரினா என உறுதி செய்யப்பட்டது.

மருத்துவக்குழுவினரின் உடற்கூறு ஆய்வில், மாணவி பலரால் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதும் உறுதியானது.

இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார், சங்கரய்யா என்ற இளைஞரை கைது செய்தனர். இவர் அந்த மாணவியின் தாய்மாமன. சரிதாவை திருமணம் செய்ய ஆசைப்பட்ட சங்கரய்யா, அதற்கு சரிதா ஒத்துக்கொள்ளாததால், கடத்தி அருகிலுள்ள பம்ப் செட் ரூமில் அடைந்து வைத்து பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது அவருக்கு உடந்தையாக இருந்தவர்களும், அந்த மாணவியை பலாத் காரம் செய்தாகவும்,  தொடர்ந்து 4 நாட்கள் அவரை பலாத் காரம் செய்து வந்ததும், அதன் காரணமாக அந்த மாணவி மரணத்தை தழுவியதும்  விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த கொடூரமான சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் 2பேர் 18வயதுக்கும் குறைவானர்கள் என்பதும், மற்ற 3 பேர் 18வயது மேலானவர்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் திருவள்ளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

,

Leave a Reply

Your email address will not be published.