குவாரிகள், மீத்தேன் போன்ற நடவடிக்கைகளால் சென்னை, நாகப்பட்டினம் கடலில் மூழ்கும் அபாயம்!

டில்லி:

யற்கைக்கு மாறான நடவடிக்கைகள் மற்றும் புவி வெப்பமயமாகுதல் போன்ற காரணங்களில் தமிழகத்தில் சென்னை, நாகப்பட்டினம் போன்ற கடற்கரை மாவட்டங்கள்  கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக  தெற்காசிய  நீர் ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இயற்கையை அழித்து, குவாரிகள், மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற திட்டங்கள் செயல் படுத்துவதால் பூமியின் அடித்தளம் பாதிக்கப்பட்டு விரைவில் கடல்நீர் புக வாய்ப்பு இருப்பதாகவும், இதன் காரணமாக கடலோர பகுதிகள் கடலுக்குள் மூழ்கும் அபாயம் உள்ளதாக கூறி உள்ளது.

கடல் நீரால் அரிக்கப்பட்டு வரும் சென்னை கடற்கரை

இதுகுறித்து  தெற்காசிய நீர் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் கூறும்போது, சமீபத்தில் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பு மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டதே தவிர இயற்கை காரணம் அல்ல.

தமிழகம் மற்றும் கேரளா உள்பட 6 மாநிலங்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை இயற்கை வரமாக பாதுகாப்பாக உள்ளது. இந்த மலையில்  குவாரிகளை அனுமதிக்க கூடாது. குடியேற்றங்களை அனுமதிக்க கூடாது என்று ஏற்கனவே ஆராய்ச்சியாளர்  மாதவ் காட்கில் தலைமையிலான குழு ஒரு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

ஆனால், அந்த அறிக்கையை ஏற்க கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் மறுப்பு தெரிவித்தன.  அதனால் ஏற்பட்ட விளைவுதான் கேரளாவில் தற்போது ஏற்பட்ட பேரழிவு என்று குற்றம் சாட்டினார்.

மேலும்,  சென்னை நகரில் தான் வெள்ள நீர்  வெளியேற பல  வடிகால் வசதி இருந்தும், அதை  முறையாக பராமரிக்காததால், கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்றும் குற்றம் சாட்டினார்.

அதுபோல, சென்னையில் வார்தா புயலின்போது வேரோடு சாய்ந்த மரங்கள் அனைத்தும் வெளிநாட்டு வகையை சார்ந்த மரங்கள். ஆனால் நமது நாட்டு மரங்களான வேம்பு, அரசு உள்ளிட்ட மரங்கள் ஒன்றுகூட விழவில்லை என்பதை நினைகூர்ந்தவர்,

நாகப்பட்டிணம் கடற்கரை

கல் குவாரிக்காகவோ அல்லது நியூட்ரினோ போன்ற திட்டங்களுக்காகவோ, பாறைகளை உடைக்கும் போது அல்லது குடையும் போது அந்த பாறையோடு இணைந்த உறுதியானது மண் பிணைப்பு நெகிழ்ந்து விடும். இது மழை காலத்தில் நிலச்சரிவை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்தார்.

நிலத்தடியில் இருந்து மீத்தேனை எடுக்கும்போது மீத்தேனுடன் நிலக்கரி, பாறைகள், தண்ணீர் ஆகியவை வெளியேறும். இதன் காரணமாக பூமியின் அடித்தளத்தில் வெற்றிடம் ஏற்படுகிறது.  புவி வெப்பமயமாவதால் கடல்மட்டம் உயர்ந்து வரும் நிலையில், கடல்நீர் அந்த வெற்றிடங்களில் புகுந்து அந்த பகுதியை மூழ்கடித்து விடும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

நாகப்பட்டினம் போன்ற கடற்கரை மாவட்டங்களுக்கு இதனால் பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எச்சரித்தவர்,. இயற்கையின் சமநிலையை நாம் எப்போதும் சீர்குலைத்து விடக்கூடாது என்றும் கூறினார்.

ஏற்கனவே சென்னை உள்பட தமிழக கடற்கரையோர பகுதிகளில் கடல்நீர் மட்டம் உயர்வு மற்றும் கடல் அரிப்பு காரணமாக கடற்கரை பகுதிகளில் உள்ள வீடுகள் பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: chennai, Nagapattinam sinks at sea: South Asia Water Research Institute warns, குவாரிகள், நாகப்பட்டினம் கடலில் மூழ்கும் அபாயம்!, மீத்தேன் போன்ற நடவடிக்கைகளால் சென்னை
-=-