சென்னையில் இன்று 1138 பேர் – மொத்த பாதிப்பு 95,857 ஆக உயர்வு

சென்னை:

மிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று உச்சபட்சமாக 6993 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2லட்சத்து 20ஆயிரத்து 716 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து வருகிறது. இருந்தாலும், தொற்று பாதிப்பு ஆயிரத்தை தாண்டியே உள்ளது.

இன்று ஒரே நாளில் 1138 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால்,   சென்னை யில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 95,857 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இதுவரை 80,761  பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

தற்போதய நிலையில், 13,064 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதில் அதிகபட்சமாக, சென்னையில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,032 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 77 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,571 ஆக உயர்ந்துள்ளது.

இன்று உயிரிழந்த 84 பேரில், தனியார் மருத்துவமனையில் 20 பேரும், அரசு மருத்துவமனையில் 57 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து 57-ம் நாளாக இரட்டை இலக்கை எட்டியுள்ளது.

You may have missed