சென்னை,

ற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டம்  நடத்திய சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது.

அதைத்தொடர்ந்து போராட்டத்தை தூண்டியதாக 15 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கதிராமங்கலம், நெடுவாசல் போன்ற மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதாக, பச்சையப்பன் கல்லூரி  மாணவர்களை கடந்த 15 நாட்களுக்கு முன்பாக   கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.  68 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்ப்பட்டனர்.

அவர்களை மீண்டும் கல்லூரியில் அனுமதிக்க கோரி இன்று பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினார்.

அமைதியாக போராட்டம் நடத்திய மாணவர்களை கலைந்துசெல்ல போலீசார் அறிவுறுத்தினர். ஆனால், கலைந்து செல்லாததால்,  அவர்கள்டுமீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அதைத்தொடர்ந்து 15 மாணவர்களை போலீசார் கைது செய்து உள்ளனர்.

 

சென்னையில் கீழ்ப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும்  பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 68 பேரை கல்லூரி நிர்வாகம் சமீபத்தில் 15 நாள்களுக்கு சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டது.

இவர்கள் ஒழுக்கம் தவறி நடந்து கொண்டதால் சஸ்பென்ட் செய்ததாக கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.

ஆனால்,  மாணவர்களோ தாங்கள் கதிராமங்கலம் மற்றும் நெடுவாசல் மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய காரணத்துக்கு கல்லூரி நிர்வாகம் தங்களை  இடைநீக்கம் செய்துள்ளதாக கூறி உள்ளனர்.