‘சென்னை பழனி மார்ஸ்’ படத்தின் 3வது ப்ரோமோ…!

ஆரஞ்சு மிட்டாய் புரொடக்ஷன்ஸ் மற்றும் விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் , இயக்குநர் பிஜு இயக்கத்தி; உருவாகியுள்ள படம் சென்னை பழனி மார்ஸ் . இந்த படம் வரும் ஜூலை 26ந் தேதி வெளியாகிறது.

திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இரண்டு சர்வதேச விருதுகளை தட்டிச் சென்றுள்ளது இப்படம்

பின்னாக்கிள் ஃபிலிம் அவார்ட்ஸ் விழாவில் பெஸ்ட் நேரேட்டிவ் பிளாட்டினம் அவார்டையும், லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற விழாவில் பெஸ்ட் டிராமா கிராண்ட் ஜூரி கோல்ட் அவார்டையும் பெற்றுள்ளது . இரு விருதுகளுமே அமெரிக்க விருதுகளாகும்.

இப்படத்தில் மதன்குமார் தக்சிணா மூர்த்தி, ஏ. ரவிகுமார், ஆல்வின் ராமைய்யா, ஆர். கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

கார்ட்டூன் கேலரி