கொள்ளையர்களால் சுடப்பட்ட காவல் ஆய்வாளர் குடும்பத்துக்கு ஆணையர் ஆறுதல்

சென்னை,

கொள்ளையர்களால் சுடப்பட்ட காவல் ஆய்வாளர் வீட்டிற்கு சென்று அவரது  குடும்பத்தினருக்கு ஆணையர் ஆறுதல் கூறினார்.

 

சென்னை கொளத்தூரில் நடந்த நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் தொடர்புள்ள கொள்ளை யர்களைப் பிடிக்க ராஜஸ்தான் சென்ற காவல்துறை குழுவில் இருந்த மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளர் பெரியபாண்டி சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது. இந்த நிலையில் ஆவடியில் உள்ள பெரிய பாண்டியின் வீட்டுக்கு சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

“நடந்த சம்பவம் மிகவும் வருத்தத்துக்குரியது. பெரியபாண்டியின் தியாகம் போற்றப்பட வேண்டியது” என்று சென்னை மாநகர காவல் ஆணையாளர்  விஸ்வநாதன் தெரிவித்தார்.