சென்னை,

கோர்ட்டில் நேரில் ஆஜராக உத்தரவிட்டும், ஆஜராகாமல் டிமிட்டி கொடுத்து வரும் சென்னை மாநகர போலீஸ் ஆணையர் ஜார்ஜுக்கு சென்னை உயர்நீதி மன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளது.

மேலும் வரும் 27ந்தேதி (அடுத்த திங்கட்கிழமை) கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற  ஜாமீன் மனு மீதான விசாரணை யின்போது, மத்திய குற்றப்பிரிவில்  2011–ம் ஆண்டு வரை நூற்றுக்கணக்கான வழக்குகளில் விசாரணை முடிவு பெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து விரிவான அறிக்கை அளிக்க நீதிபதி வைத்தியநாதன் உத்தரவிட்டிருந்தார்.  நான்கு மாதத்திற்குள் விசாரணை அறிக்கை அளிக்க வேண்டும் என்றும்.

மேலும், நான்கு மாதத்துக்குள் அறிக்கையை தாக்கல் செய்யாவிட்டால் காவல்துறை ஆணையர் ஐகோர்ட்டில் நேரில் ஆஜராகி வாய்மொழியாகவும், எழுத்துபூர்வமாகவும் விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

ஐகோர்ட்டு வழங்கிய கால அவகாசம் டிசம்பருடன் முடிவடைந்துள்ள நிலையில், வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை ஆணையர் ஜார்ஜ் நேரில் ஆஜராகவில்லை. மேலும் அவரது சார்பாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையும் தாமதமாகவே தாக்கல் செய்யப்பட்டது.

இதனால் கோபமடைந்த நீதிபதி வைத்தியநாதன், காவல்துறை ஆணையர் ஜார்ஜுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் வரும் 27ந்தேதி (அடுத்த திங்கட்கிழமை) கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.