பெரிய பாண்டியனை சுட்ட விவகாரம்….சென்னை போலீஸ் மறுப்பு

சென்னை:

மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் இறப்பு குறித்து ராஜஸ்தான் பாலி மாவட்டத்தில் உள்ள ஜெய்தரன் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இது குறித்து எவ்வித கருத்தையும் சென்னை பெருநகர காவல்துறை அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பெரிய பாண்டியனை கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் தவறுதலாக சுட்டதில் தான் இறந்தார் என்று தமிழக போலீசார் உறுதிபடுத்தியதாக செய்திகள் வெளியானது. இதை தான் தற்போது சென்னை போலீசார் மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.