லக அளவில் டிரெண்டிங்கான வடிவேலு காமெடி பாத்திரத்தின் பெயரான நேசமணி (Nesamani) ஹேஸ்டேக்டை ஹெட்மெட் விழிப்புணர்வுகாக சென்னை போலீசார். பயன்படுத்தி வருகின்றனர். இது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டரில் வடிவேலு விஜய் உடன் நடித்த ஒரு படத்தின் கதாபாத்திரமான நேசமணி கதாபாத்திரம் இன்று உலக அளவில் டிரெண்டிங்காகி உள்ளது.

#Pray_for_Neasamani, #PrayforNesamani என்ற ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங் களில் நேற்று முதல் ட்ரெண்டாகி வருகின்றன. இன்று உலக அளவில் டாப் இடத்தை பிடித்துள்ளது.

சிவில் இன்ஜினியரிங் லேனர்ஸ் என்ற ட்விட்டர் பக்கத்தில் சுத்தியல் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, அது நேசமணி தலையில் விழுந்தது என ஒரு நெட்டிசன் பதிலளித்துள்ளார்.

மேலும் ஏராளமானோர் வடிவேலுவின் நேசமணியை டிரெண்டிங்காக்கி பதிவிட்டுள்ளனர். அவர்களின் பதிவுகள் கீழே … வாசகர்களுக்காக தொகுக்கப்பட்டுள்ளது.

மே 27-ம் தேதி Civil Engineering Learners’ என்ற ஃபேஸ்புக் பக்கம், சுத்தியல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, “இதற்குப் பெயர் சுத்தியல். எதன்மீது இதைக்கொண்டு அடித்தாலும் ‘டங் டங்’ என்று சத்தம் வரும். ஜமீன் வீட்டில் பெயின்டிங் ஒப்பந்தக்காரர் நேசமணி தலைமீது, அவரது சொந்தக்காரர் சுத்தியலைப் போட்டுவிட்டார் என்று கமென்ட் அடிக்க, அதற்கு பதில்கள் தொடர, #PrayforNesamani ஹேஸ்டேக் பிரபலமானது.

நேற்று சென்னை அளவில் டிரெண்டிங்கான   #Pray_for_Neasamani என்ற ஹேஷ்டேக் இன்று  உலக அளவில் இரண்டாவது பிடித்துள்ள அளவுக்கு நெட்டிசன்கள் டிரெண்டிங்காக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை மாநகர காவல்துறையும் இந்த டிரெண்டிங்கை உபயோகப்படுத்தி ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.