Random image

சென்னை: கருணாநிதிக்கு பிரனாப் முகர்ஜி அஞ்சலி

சென்னை:
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிகு பிரனாப் முகர்ஜி அஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று சென்னை வந்தார். இன்று இரவு மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அவரை திமுக தலைவர் ஸ்டாலின், எம்.பி. கனிமொழி ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “கருணாநிதி மறைந்த சமயத்தில் வர இயலவில்லை. சிறந்த தலைவரான கருணாநிதியை இழந்து விட்டோம். 48 ஆண்டுகள் நல்ல நண்பராக இருந்தவர் கருணாநிதி’’என்றார்.