சென்னை:

கதிகள் முகாம்  சென்று கணக்கெடுப்பு நடத்த முயன்ற விகடன் செய்தியாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது,  பத்திரிகை சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் மீதான தாக்குதல் என்று  சென்னை பிரஸ் கிளப் கண்டனம் தெரிவித்து உள்ளது.

மத்திய அரசு அமல்படுத்தி உள்ள புதிய சட்டத்திருத்த மசோதாவில், இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்காதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், இலங்கை தமிழர்கள், மீண்டும் தாயகத்துக்கே திருப்ப வேண்டும் என்றும், அவர்கள் மீண்டும் இலங்கை செல்ல விரும்புகிறார்கள் என்றும் கூறினார்.

இதையடுத்து, இலங்கை தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு சென்று, அவர்களின் கருத்துக்கள் என்ன என்பது குறித்து ஆராய, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த விகடன் பத்திரிகையின் செய்தியாளர் மற்றும்  புகைப்பட கலைஞர் சென்றிருந்தனர்.

அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திய காவல்துறையினர், அவர்கள்மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர் மீதான வழக்கு பத்திரிகை சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் மீதான தாக்குதல்! சென்னை பிரஸ் கிளப் கண்டனம் தெரிவித்து உள்ளது. அது வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கன்னியாகுமரியில் ஜாமீன் பெறாத பிரிவுகளின் கீழ் ஜூனியர் விகடனின் நிருபர் மற்றும் புகைப்படக் கலைஞருக்கு எதிரான வழக்குகள் பதிவு செய்யப்பட்டதை கண்டிப்பதாகவும்,  சில பாஜக தலைவர்கள் பரிந்துரைத்தபடி நிருபர்கள் இலங்கை அகதிகள் முகாமில் ஒரு கணக்கெடுப்பை நடத்த சென்றனர்.

அவர்கள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள கண்டனத்துக்குரியது. காவல்துறையின் இந்த நடவடிக்கை பத்திரிகை சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் மீதான தாக்குதல் என்று தெரிவித்து உள்ளது.