புதுடெல்லி:
னிமைப்படுத்தப்பட்ட விடுப்பை ரத்து செய்ததால் போராட்டம் நடத்திய அனைத்து மருத்துவர்களையும் தனியார் மருத்துவமனை ஒன்று பணியிடை நீக்கம் செய்துள்ளது.
தனியார் மருத்துவமனை ஒன்றில் சிறப்பு தனிமைப்படுத்தப்பட்ட  விடுப்பை ரத்து செய்ததால், போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மருத்துவமனை  மறுத்துள்ளது.
 கொரோனா காலகட்டத்தில் வேலை பார்க்கும் அனைத்து மருத்துவர்களுக்கும் சிறப்பு தனிமைப்படுத்தப்பட்ட விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது, இந்த விடுமுறையை ஒரு தனியார் மருத்துவமனை ரத்து செய்ததால் அந்த மருத்துவமனையின் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து மருத்துவர்களையும் அந்தனியார் மருத்துவமனை பணியிடை நீக்கம் செய்துள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை மருத்துவமனை கடுமையாக மறுத்து, சிறப்பு தனிமைப்படுத்தப்பட்ட விடுப்பு கொள்கைகள் அரசாங்க வழிகாட்டுதலின்படி சரியாக நடந்து வருகிறது என்று தெரிவித்துள்ளனர்.
ஜூன் 18-ஆம் தேதி மத்திய சுகாதார அமைச்சகம் கொரோனா காலகட்டத்தில், பணிபுரியும் அனைத்து மருத்துவர்களுக்கும் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்பட்ட விடுப்பு அளிக்க வேண்டும் என்று அறிவித்தது. ஆனால் விஜயா மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனம் அதனை ஏற்காமல், வேலை செய்ய மருத்துவர்கள் இல்லை என்று அந்த தனிமைப்படுத்தப்பட்ட விடுப்பை ரத்து செய்தது மட்டுமல்லாமல், மருத்துவர்கள் அதிக நேரம் வேலை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
அதனால் இதனை எதிர்த்து போராடிய அனைத்து மருத்துவர்களையும் இந்த தனியார் மருத்துவ நிறுவனம் பணி இடைநீக்கம் செய்து அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.