18மாத குழந்தையாக கடத்தப்பட்டவர் 20ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோருடன் சந்திப்பு! நெகிழ்ச்சி சம்பவம்

சென்னை:

சென்னை புளியந்தோப்பு பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு 18மாத குழந்தையாக இருந்தபோது கடத்தப்பட்ட நபர்,  தற்போது 20வயது வாலிபனாக, கடும் முயற்சிக்குப் பிறகு தனது பெற்றோரை சந்தித்துள்ளார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெற்றோருடன் அவினாஷ்

கடந்த 1999ம் ஆண்டு பிப்ரவரி 18ந்தேதி அன்று  புளியந்தோப்பு பகுதியில் வசித்து வந்த சிவகாமி,நாகேஸ்வர் ராவ் தம்பத்தியினரின் இளையமகன் அவினாஷ். சம்பவத்தன்று, சிவகாமி, அருகில் உள்ள  குழாயடிக்குச் தண்ணீர் எடுக்க சென்றபோது, தனது 18 மாத  குழந்தை திடீரென  காணாமல் போனதாக கூறியிருந்தார். குழந்தையை அக்கப்பக்கத்தில் தேடியும் கிடைக்காத நிலையில், காவல்நிலையத்தில் புகார் அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

விசாரனையில், மர்மநபர் ஒருவர் அந்த குழந்தையை இரு சக்கர வாகனத்தில் தூக்கிச் சென்றதாக அந்த பகுதியில் உள்ள சிறுமி ஒருவர் தெரிவித்த நிலையில், அதுகுறித்து விசாரணை நடத்தி வந்த போலீசாரால்,  குழந்தை மீட்க முடியவில்லை.

இது தொடர்பாக சிவகாமி தம்பதியினர், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தும், பெயின்டரான நாகேஸ்வரராவும், மும்பை, ஐதராபாத் போன்ற பகுதிகளுக்குச் சென்றும் காணாமல் போன அவினாஷை தேடி வந்தார்.

இந்த நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது 22 வயதாகும், அவினாஷ் என்ற ஜே மந்தே என அழைக்கப்படும் சுபாஷை கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 8) சந்தித்தனர். இந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சந்திப்பு குறித்து கூறிய அவினாஷ், “தற்போது நான் எப்படி உணர்கிறேன் என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. மகிழ்ச்சி, சோகம், வலி, நிவாரணம் மற்றும் அனைத்து உணர்ச்சிகளும் உள்ளன, ”என்று தெரிவித்து உள்ளார்.

சமூக விரோதிகளால் வெளிநாட்டுக்கு விற்பனை செய்யப்பட்ட அவினாஷ் கடந்த 2 ஆண்டுகளாக தனது பெற்றோரை சந்திக்க முயற்சித்து வந்த நிலையில், வழக்கறிஞர் ஒருவர் உதவியுடன் பெற்றோர் மற்றும் சகோர சகோதரிகள் இருக்கும் இடத்தை கண்டறிந்ததாகவும், தொடக்கத்தில் அவர்களிம் வீடியோ சாட் மூலம் உரையாடிய நிலையில், கடந்த ஞாயிறன்று அவர்களை நேரில் சந்தித்தார்.

அவினாஷ், விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார். அவருக்கு தமிழ் தெரியாத நிலையில், விரைவில் தமிழ் கற்றுக்கொள்வேன் என்று தெரிவித்து உள்ளார். தற்போது பெற்றோருடன் உள்ள அவினாஷ் நாளை (வியாழக்கிழமை)  நகரத்தை விட்டு வெளியேறுகிறார்.

நான் விரைவில் திரும்பி வருவேன், தனது பெற்றோர்களை நன்றாககவனித்துக்கொள்வேன்,” என்றும்  தெரிவித்துள்ளார் அவினாஷ்.

You may have missed