சென்னை: சென்னையில் பல்வேறு கிளைகளை கொண்டுள்ள சரவணா ஸ்டோர்ஸ்சின்  புரசைவாக்கம் கிளையில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே 13 பெருக்கு தொற்று உறுதியான நிலையில், தற்போது  மேலும் 26 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 39 ஆக உயர்நதுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், வணிக நிறுவனங்களில் பணியாற்றும் அனைவரும் கொரோனா சோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளதுடன், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

அதன்படி,   சென்னை புரசைவாக்கத்தில் அமைந்துள்ள பிரபல வணிக வளாகமான சரவணா ஸ்டோரில் பணியாற்றி வரும் 165 ஊழியர்களுக்கும்  கடந்த வார இறுதியில் மாநகராட்சி சார்பில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.  இதன் முடிவுகள் வெளியாகி வருகின்றன. ஏற்கவே முதல்கட்டமாக 13 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், இன்று , மேலும் 26 பேருக்கு இன்று நோய்த்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தண்டையார்பேட்டையிலுள்ள காலரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து சரவணா ஸ்டோர்ஸ் மூடப்பட்டு, வணிக வளாகம் சுத்தப்படுத்தப்பட்டு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.