சென்னை பிரபல நகைக்கடையில் 4வது நாளாக நீடிக்கும் சோதனை!

சென்னை,

ந்தியாவில் பல கிளைகள் கொண்ட பிரபல நகைக்கடையில் வரி எய்ப்பு குறித்து இன்று நான்காவது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த நகைக்கடையில் ரூ.60 கோடி வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

சென்னையில் ஏற்கனவே பல நகைக்கடைகளில் வரி சம்பந்தமாக சோதனை நடைபெற்றது. தற்போது, சென்னை,  கோவை, திருச்சி, பெங்களூரு, ஐதராபாத், மும்பை ஆகிய இடங்களில் கிளைகள் உள்ள பிரபல நகைக்கடையில் தொடர்ந்து 4வது நாளாக  மத்திய கலால் துறையின் புலனாய்வு பிரிவு இயக்குனரகம் சோதனையை மேற்கொண்டு வருகிறது.

கடந்த மாதம் 8ந்தேதி பணம்  மதிப்பிழப்பு செய்யப்பட்டதாக மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்ட பிறகு நாடு முழுவதும் கருப்பு பண வேட்டை நடைபெற்று வருகிறது. அறிவிப்பு வெளியானபோது நகை கடைகளில் விற்பனை களைகட்டியது.

ஒரு நகை கடையில் மட்டும் மார்ச் மாதம் முதல் கடந்த நவம்பர் மாதம் வரை  ரூ. 4,600 கோடி விற்பனை நடைபெற்று உள்ளது விசாரணையில் தெரிய வந்தது. இதற்க்கு ரூ. 40 கோடி வரி செலுத்துவதற்கு பதிலாக ரூ.12 கோடி மட்டுமே வரி செலுத்தப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோல நாடு முழுவதும்  45 பிரபல நகைகடை  நிறுவனங்கள்  வரி ஏய்ப்பு செய்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கடைகளில்  நகை விற்பனை நடைபெற்றது  தொடர்பாக கடைகளில் பொருத்தப்பட்ட சிசிடிவி பதிவுகள் கைப்பற்றி அதன் அடிப்படையில் விசாரணை நடைப்பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.