சென்னை நிலைமை கட்டுக்குள் உள்ளது! ஓபிஎஸ் தகவல்

மதுரை,

மிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள நிலமை கட்டுக்குள் இருப்பதாக துணை முதல்வர் ஓபிஎஸ் கூறி உள்ளார்.

தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மற்றும் நெல்லை மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.

இதையடுத்து நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்து, நிவாரண உதவிகள் வழங்கினர்.

அதைத்தொடர்ந்து நெல்லையில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதத்தை பார்வையிட துணைமுதல்வர் ஓபிஎஸ் நெல்லை செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று மதுரை விமான நிலையம் வந்த ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

”வடகிழக்குப் பருவமழை படிப்படியாக அதிகரிப்பது வழக்கமாகியுள்ள நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தி லேயே மழை அதிக அளவில் பெய்துள்ளது.

இருந்தாலும், வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே அரசு  பல்வேறு முன்னேற்பாடுகளை செய்முதிருந்தது. இதில் தமிழக அரசின் பல்வேறு துறைகள் ஈடுபட்டிருந்தது. இதன் காரணமாக பெரும்  சேதம் தவிர்க்கப்பட்டது.

நேற்று முதினம் வியாழக்கிழமையன்று மழை 14 செ.மீ பதிவானது. ஆனாலும், வெள்ளம் பகலில் வடிந்துவிட்டது. ஆனால் மீண்டும் நேற்று  கடுமையான கனமழை பெய்ததால் வெள்ளம் சூழ்ந்தது.  அரசு அதிகாரிகள் துரிதமாக செயல்பட்பட்டு உரிய நடவடிக்கை எடுத்ததால் தற்போது சென்னை நிலைமை கட்டுக்குள் உள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்க நிவாரணம் உள்ளிட்ட பல்வெறு நடவடிக்கைகள் தமிழக அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.