சென்னை:

சென்னையில் கடந்த இரு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருவதால், பள்ளமான பகுதிகளிலும், நீர்த்தேங்கும் பகுதிகளிலும் குடியிருந்து வரும் மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

கடந்த  2015ம் ஆண்டு சென்னையை புரட்டிப்போட்ட மழை, வெள்ளம் பேரழிவை ஏற்படுத்திய நிலையில், தற்போதும் விட்டு விட்டு மழை பெய்து வருவது சென்னை புறநகர் மக்களை புலம்ப வைத்துள்ளது.

நேற்று முன்தினம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் மழை, நேற்று சற்று அதிகமாகவே பெய்தது. இரவிலும் நல்ல மழை பெய்த நிலையில், இன்று காலை  முதல் மீண்டும் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக  சென்னையின்  உள்ள முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஒடியது, சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரால் வாகனங்ள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்று விடுமுறை என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை.

சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் புவியரசன்  தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை, மற்றும் மிக கனமழை பெய்யும் என்று நேற்று எச்சரித்தி ருந்தார். மேலும், வளிமண்டல மேலடுக்கில் நிலவும் காற்றின் சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை அல்லது கன மழைக்கு பெய்யும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம்  உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில்  நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சென்னையில் பெய்துவரும்  தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை  பாதிக்கப்பட்டுள்ளது.

மழை இப்படியே தொடர்ந்து பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதனால் சென்னை வாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், சென்னையில் இந்தாண்டு தண்ணீர் பஞ்சம் இருக்காது என்று நம்பி உள்ளனர். அதேவேளையில் மழைநீர் அனைத்தும் சாலையில் தேங்கியும், கூவத்திலும் சென்று வீணாவது மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. ‘

இந்த நிலையில் சென்னையில் மேலும் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், சாதரைண மழைக்கே சென்னை தத்தளிக்கும் நிலை உருவாகி வருகிறதே… மேலும்  கனமழை பெய்தால் மக்களின்  நிலமை என்னவாகுமோ என்று புலம்பும் நிலைக்கு பலர் ஆளாகி உள்ளனர்.

புறநகர் பகுதிகளில் வசித்து வரும் சென்னைவாசிகள்,  மேலும் கனமழை பெய்தால், தாங்கள் கடந்த 2015ம் ஆண்டு சந்தித்த பேரழிவை மீண்டும் சந்திக்க நேரிடுமோ என்ற அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.