சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் 6 மருத்துவர்களுக்கு கொரோனா…

சென்னை:

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் 6 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது மருத்துவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் குறிப்பாக சென்னையை  பொறுத்தவரை  கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானோர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுசிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தினசரி 4ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த  பெண் மருத்துவர் உள்பட 4 மருத்துவ மேற்படிப்பு மாணவிகள் மற்றும் ஆண்கள் விடுதியில் 2 மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள் என 6 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது மற்ற மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.