அடையாளம் தெரியாத பிணங்களால் பிணவறை ‘ஃபுல்’: இடம் பற்றாக்குறையால் தத்தளிக்கும் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை

சென்னை:

திகரித்து வரும் அடையாளம் தெரியாத பிணங்களால் அரசு மருத்துவமனை பிணவறையில் இடம் பற்றாக்குறை நிலவுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக  விபத்து போன்ற காரணங் களால் இறந்தவர்களின் உடல்களை பாதுகாத்து வைப்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.

தற்போதைய நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 144 அடையாளம் தெரியாத பிணங்கள் உள்ளதாகவும், அவர்கள் யார் என்பது குறித்து இதுவரை அடையாளம் கண்டு பிடிக்காத நிலையில், புதிய பிணங்கள  பாதுகாப்பாக வைப்பதற்கு இடமின்றி மருத்துவமனை நிர்வாகம்  தடுமாறி வருவதாக கூறப்படுகிறது.

சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனை வளாகத்தில் ஏற்கனவே இருந்த பிணவறை ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. அதில் 250 உடல்கள் வரை வைக்க முடியும். ஆனால் கடந்த சில ஆண்டு களுக்கு முன் அது புதிய  கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது. அந்த பிணவறையில் 60 உடல்கள் மட்டுமே வைக்க முடியும். இந்த நிலையில் சமீப காலமாக அனாதை பிணங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவர்கள் யார் என்பது குறித்து அடையாளம் காண்பதில் சிரமம் நீடித்து வருகிறது. இதன் காரணமாக பிணவரை நிரம்பி வழிவதால் புதிய பிணங்கள் பாதுகாப்பாக வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அனாதை பிணங்களை அப்புறப்படுத்துவதில் அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறி வருகின்றனர்.