சென்னை அரசு பொதுமருத்துவமனையில் 3மருத்துவர்கள் உள்பட 31 பேர் கொரோனாவால் பாதிப்பு

சென்னை:

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் 3மருத்துவர்கள் உள்பட 31 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி தெரிவித்து உள்ளார்.

சென்னையில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் ஜெட் வேகத்தல் பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில்  மட்டும் புதிதாக  1,243 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை யடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,545 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அரசு பொதுமருத்துவமனை முதல்வர்,  3 அரசு மருத்துவர்கள் உள்பட 31 மருத்துவ பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறினார்.

மேலும்,  கொரோனா பாதிக்கப்பட்ட 31 மருத்துவ பணியாளர்களும், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகாக  நந்தம்பாக்கம் டிரேடு சென்டர் உள்பட  பல்வேறு கொரோனா தடுப்பு மையங்களில் பணியாற்றி வந்தவர்கள் என்றார்.