107 ரன்கள் இலக்கு – 4 விக்கெட்டுகளை இழந்தே வென்றது சென்னை அணி!

மும்பை: பஞ்சாப் அணி நிர்ணயித்த 107 ரன்கள் என்ற சிறிய இலக்கை, 4 விக்கெட்டுகளை இழந்தே எட்டியது தோனியின் சென்னை அணி.

டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவெடுத்த சென்னை அணி, பஞ்சாபை 106 ரன்களுக்கெல்லாம் சுருட்டியது. இதனால், சென்னை அணிக்கு மிகச்சிறிய இலக்கு அமைந்தது.

இந்நிலையில், களமிறங்கிய சென்னை அணியின் துவக்க வீரர் ருதுராஜ், வீண் ஆட்டம் ஆடினார். பின்னர், டு பிளசிஸ் 33 பந்துகளில் 36 ரன்களை அடிக்க, மொயின் அலி 31 பந்துகளில் 46 ரன்களை அடித்தார்.

ரெய்னா 8 ரன்களிலும், அம்பாதி ராயுடு டக்அவுட்டும் ஆக, சாம் கர்ரன் 5 ரன்கள் அடிக்க, 15.4 ஓவர்களில், 4 விக்கெட்டுகளை இழந்து, 107 ரன்கள் எடுத்து வென்றது சென்னை அணி.

தனது முதல் போட்டியில், டெல்லி அணியிடம் தோற்ற சென்னை, இரண்டாவது போட்டியில், பஞ்சாப் அணியை வென்றுள்ளது.