சென்னை:

சென்னையின் தென்மேற்கு வடமேற்குப் பகுதிகள் நீாில் மூழ்கத் தயாராகிக் கொண்டு இருக்கின்றன என்று நடிகர் கமல் எச்சரித்துள்ளார்.

இது அரசுக்கும் மக்களுக்கும் கொடுக்கப்படும் முன்னறிவிப்பு. உடனே செயல் பட்டால் வருமுன் காப்பதாகும். எனக்கு வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன என்று கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் எச்சரிக்கை பதிவை  பதிவிட்டுள்ளார்.

கடந்த 3 நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி  உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.

இந்நிலையில் சென்னை புறநகர் பகுதிகளும் தண்ணீரால் சூழப்பட்டு, கடந்த 2015ம் ஆண்டு பேரிடரை நினைவூட்டி வருகிறது.

இந்நிலையில், கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் சென்னை மீண்டும் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறி உள்ளார்.

அதில்,  சென்னையின் தென்மேற்கு வடமேற்குப் பகுதிகள் நீாில் மூழ்கத் தயாராகிக் கொண்டு இருக்கின்றன. சேலையூா ஏாி, கூடுவாஞ்சோி, நந்திவரம், முடிச்சூா ஏாிகள் நிரம்பி வழிய அதிக நேரமாகாது.

நில அபகரிப்புநீாநிலை ஆாவலாகளுக்கோ மக்களுக்கோ இந்த ஏாிகளின் கொள்ளளவு தொியாது. நீா வரத்து பாதைகளும், நீா வெளியேறும் பாதைகளும் தொியாது. தொியாது, தொியாது என்பதை விட நில அபகாிப்புக்கு வசதியாய் தொியாமல் வைக்கப்பட்டிருக்கிறது என்பதே கசப்பான உண்மை.

சட்டம் மீறப்படுகிறதுநன்மங்கலத்தில் இருந்து மற்றொரு ஏாிக்கு நீா வரும் பாதையை மறித்துக் கட்டப்பட்ட கட்டிடத்தை இடிக்க நீதிமன்றம் 2015ல் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இன்று வரை சட்டம் மீறப்பட்டே வருகிறது.

விழிப்புணர்வுஅப்பகுதிகளில் வாழும் மக்கள் விழிப்புடன் இருக்கவும், குரலெழுப்பவும் ஊடகங்கள் உதவவேண்டும். வரும் முன் காப்போம், நித்திரை கலைப்போம்.

இவ்வாறு கமல் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில், எண்ணூர் கழிமுகம் காரணமாக வடசென்னைக்கு ஆபத்து என்று டுவிட்டரில் குறிப்பிட்டும், அதைத் தொடர்ந்து எண்ணூர் பகுதிக்கு சென்று பார்வையிட்டதும் குறிப்பிடத்தக்கது.