சென்னை சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும்! அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை,

சென்னையில் மழை காரணமாக சேதமடைந்துள்ள சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும் என்றும், உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக இருக்கிறது என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்  கூறி உள்ளார்.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.கடந்த ஒரு வாரமாக சென்னையில் பெய்து வந்த கன மழை மற்றும் தொடர் மழை காணமாக சாலைகள் குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

இந்நிலையில், மழை பாதிப்பு குறித்து ஆய்வு செய்த அமைச்சர் ஜெயக்குமார்,  சென்னையில், மழையால் பாதிக்கப்பட்டு குண்டும் குழியுமான சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும்’ என்று கூறினார்.

மேலும் உள்ளாட்சி தேர்தல் குறித்து உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ள கருத்து குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுக்கு பதில் அளித்த அமைச்சர்,   உள்ளாட்சித் தேர்தல் உள்பட எந்தத் தேர்தலையும் கண்டு அ.தி.மு.க அஞ்சவே அஞ்சாது. உள்ளாட்சித் தேர்தல் எப்போது வந்தாலும் அதை  எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம் என்று கூறினார்.

மேலும் மழை காரணமாக தொற்றுநோய் வர வாய்பிருப்பதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சுகாதாரத் துறை அமைச்சர்  விஜயபாஸ்கர், `மழை வெள்ளத்திற்கு தமிழக அரசு தற்போது எடுத்துள்ள நடவடிக்கையால் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பே இல்லை என்றும்,  மழை நீர் தேங்குவதால் ஏற்படும் டெங்கு காய்ச்சல்  பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது’ என்றும் கூறினார்.