சென்னை: பா.ஜ.க. பிரமுகரிடமிருந்து ரூ. 45 கோடி பழைய நோட்டு பறிமுதல்

சென்னை:

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள துணிக்கடை ஒன்றில் ரூ.40கோடி அளவிலான செல்லாத ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சென்னை கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே  உள்ள  போலீசாருக்கான சீருடைகள் விற்பனை செய்யும் துணிக்கடை ஒன்றில்  ரூ.45 கோடி மதிப்புள்ள பழைய ரூ. 500, ரூ. 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கடை பாரதியஜனதா கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகருக்கு சொந்தமானது.

சென்னை சூளைமேடு ஜக்கரியா காலனி இரண்டாவது தெருவில் வசிப்பவர் தண்டபாணி. சென்னை கோடம்பாக்கத்தில் ராமநாதன் அன்ட் சன்ஸ் என்ற நிறுவனத்தை நடத்திவருகிறார்.

சினிமா படப்பிடிப்புக்குத் தேவையான போலீஸ் சீருடைகளை இந்த நிறுவனத்தில் தண்டபாணி விற்பனை செய்து வருகிறார்.

இந்த கடையின் உரிமையாளர் பாரதியஜனதா கட்சியை சேர்ந்த தண்டபானி என்பவராவார்.

கடையில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து  நடைபெற்ற அதிரடி சோதனை காரணமாக கட்டுக்கட்டாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள பழைய ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டன.

இதுகுறித்து  தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த பணம் முழு வதும் மத்திய மாநில அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு சொந்தமானதாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

மத்தியில் பாரதியஜனதா அரசு பணமதிப்பிழப்பு அறிவித்தபிறகு, பழைய ரூபாய் நோட்டுக்கள் அவ்வப்போது கைப்பற்றப்பட்டு வருகிறது.

தற்போது சென்னையில் பாரதியஜனதாவை சேர்ந்தவர் ஒருவர் கடையில் இவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டிருப்பது அரசியல்வாதிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பணம்  பாரதியஜனதா கட்சியை சேர்ந்தவர்களுடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்ப டுவதாக கூறப்படுகிறது.

தமிழகத்தை சேர்ந்த ஆளும்கட்சியினர்,  போலீஸ் அதிகாரிகளிடம் கொடுத்து புதிய நோட்டுக்க ளாக மாற்ற,  பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவரின் கடையில் பதுக்கி வைத்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக, கடை உரிமையாளரான பாஜக பிரமுகர் தண்டபானி என்பவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

ஆனால், அவர்,  நகைக்கடைக்கு மாற்றித்தர பணத்தை துணிக்கடையில் வைத்திருந்ததாக கூறி வருகிறாராம்.

கடந்த வாரம்  பெங்களூரில் பாம் நாகா என்ற ரவுடி வீட்டிலிருந்து பல கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

போலீஸ் உயரதிகாரிகள் தன்னிடம் கொடுத்து, புது நோட்டுக்களாக மாற்றித்தர கோரினர் என அவர் வாக்குமூலம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த வழக்கு வருமான வரித்துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆகவே இந்த வழக்கும் விரைவில்  கிணற்றில் போட்ட கல்லாக விரைவில் மறைந்துவிடும் என்பதில் ஐயமில்லை.