சென்னை–சேலம் எட்டு வழிச்சாலை: நிலம் கையப்படுத்தியது செல்லாது! சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு

சென்னை:

சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், வழக்கில், நிலம் கையப்படுத்துவது தொடர்பாக  பிறப்பித்த தமிழக அரசின் அறிவிப்பானையை  சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.

ரூ.10 ஆயிரம் கோடி செலவில் சென்னை-சேலம் இடையே  8 வழி பசுமை சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள்  அறிவிப்பாளை வெளியிட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வந்தனன.   இந்த திட்டத்துக்காக  சேலம், தர்மபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங் களில் ஆயிரத்து 900 ஹெக்டர் நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வந்தது.

விவசாய நிலங்கள், மலைகள், மரங்கள் உள்ள வனப்பகுதி பாதிக்கப்படுவதால், இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பல இடங்களில் நிலம் கையகப்படுத்தும்போது பிரச்சினைகள் வெடித்தது. அனைத்து அரசியல் கட்சிகளும்  பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து  பொதுமக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்தன.

இந்த நிலையில், 8வழி சாலைத்திட்டத்துக்கு  தடை விதிக்க கோரியும், திட்டத்தை ரத்து செய்யக் கோரியும் ஐந்து மாவட்ட விவசாயிகள், தருமபுரி எம்.பி அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வு விசாரணை செய்து வந்தது. ஏற்கனவே பல  கட்ட விசாரணைகள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

சென்னை சோலம் 8 வழி பசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், மேலும் அது தொடர்பான  அறிவிப்பாணையை  ரத்து செய்தும் உத்தரவிட்டு உள்ளது.

இதுவரை கையகப்படுத்திய நிலங்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், வருவாய் ஆவணங்களில் செய்யப்பட்ட மாற்றங்களை 8 வாரத்தில் பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது.

எட்டு வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த முறையான வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை  என்று கூறிய– நீதிபதிகள் எட்டு வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த நியமிக்கப்பட்ட குழுவும் முறையானதாக இல்லை  என்று கண்டனம் தெரிவித்தனர்.

8 வழச்சாலை திட்டம் தொடர்பாக மக்களிடம் உரிய முறையில் கருத்து கேட்கவில்லை என்றும்,சமூக தாக்க அறிக்கை முறையாக தயாரிக்கப்படவில்லை  என்றும் குற்றம் சாட்டினார்.

மக்கள் பணம் ரூ.10,000 கோடியில் சாலை அமைப்பதால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் .

8 வழிச்சாலை திட்டத்தை ஆய்வு செய்த தனியார் நிறுவனம் அளித்த அறிக்கை ரத்து செய்யப்படுவதாகவும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.

மாநில அரசு 8 வழிச்சாலை திட்டத்தை எப்படியாவது செயல்படுத்தி விட வேண்டும் என அவசரம் காட்டியுள்ளது என்று கூறிய நீதிபதிகள்,  2 ஆண்டுகளுக்கு கள ஆய்வு செய்து தான் இது போன்ற திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றும் அத்துடன்  மத்திய சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பிறகே 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.