ஜனநாயக நாடா? போலீஸ் வேட்டைக் காடா? சேலம் மூதாட்டி கைது குறித்து ஸ்டாலின்

சேலம்:

சென்னை சேலம் இடையே அமைக்கப்பட உள்ள பசுமை எக்ஸ்பிரஸ் வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த மூதாட்டியை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாடிலன் தனது டுவிட்டர் பக்கத்தில், இது ஜனநாயக நாடா அல்லது காடா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை சேலம் இடையே அமைய உள்ள  8 வழி சாலைக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பகுதி மக்களுக்கு ஆதரவாக களமிறிங்கிய சமூக ஆர்வலம் பியூஸ் மற்றும் நடிகர் மன்சூர் அலிகான் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில்,  போராடி வரும் பொதுமக்களை  காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில், விரைவு பசுமை சாலைக்காக தமது மலை அடிவார நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்த மூதாட்டியை சேலம் போலீசார் கைது செய்துள்ளனர்.

மூதாட்டியை சுற்றி வளைத்துள்ள காவல்துறையினர்

தனி ஒரு பெண்ணாக தனது இடத்தில் போராட்டம் நடத்திய அந்த மூதாட்டியை ஏதோ பயங்கரவாதி போல காவல் துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். இது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

எக்ஸ்பிரஸ் சாலைக்காக  தங்களது ஒப்புதல் இல்லாமல் நிலத்தை அரசு அதிகாரிகள் அளவெடுத்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கு  பொதுமக்கள் கடும்  எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில,  சேலம் அடிமலைப்புதூரில் மலை அடிவாரத்தில் இருக்கும் தம்முடைய நிலத்தை கையகப்படுத்தக் கூடாது என மூதாட்டி ஒருவர் நிலத்தில் விழுந்து புரண்டு கதறினார். ஆனால் அவரது கதறலை போலீசார் பொருட்படுத்தாமல், அந்த மூதாட்டியையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு மற்றும் காவல்துறையினரின் இந்த அராஜகம் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், இது ஜனநாயக நாடா அல்லது  போலீஸ் வேட்டைக்காடா என்று விமர்சித்துள்ளார்.